அதிகாலை சுகவேளை - Athikalai Suga Velai Song Lyrics

அதிகாலை சுகவேளை - Athikalai Suga Velai

அதிகாலை சுகவேளை - Athikalai Suga Velai

Artist: Unknown

Album/Movie: நட்பு - Natpu (1986)


Lyrics:
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத்
தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அன்பே வா வா அணைக்கவா
நீ நிலவுக்குப் பிறந்தவளா
போதை வண்டே பொறுத்திரு
இன்று மலருக்குத் திறப்பு விழா
உன்னை வந்து பாராமல் தூக்கம் தொல்லையே
உன்னை வந்து பார்த்தாலும் தூக்கம் இல்லையே
ஒரு பாரம் உடை மீறும்
நிறம் மாறும் தனியே
இதழோரம் அமுதூறும்
பரிமாறும் இனியே
அடி தப்பிப்போகக் கூடாதே
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
தென்றல் வந்து தீண்டினால்
இந்ததளிர் என்ன தடை சொல்லுமா
பெண்மை பாரம் தாங்குமா
அந்த இடை ஒரு விடை சொல்லுமா
என்னைச் சேர்ந்த உன்னுள்ளம் ஈரம் மாறுமா
தங்கம் என்ன சுட்டாலும் சாரம் போகுமா
இளங்கோதை ஒரு பேதை இவள் பாதை உனது
மலர்மாலை அணியாமல் உறங்காது மனது
இது போதும் சொர்க்கம் வேறேது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத்
தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது

Releted Songs

அதிகாலை சுகவேளை - Athikalai Suga Velai Song Lyrics, அதிகாலை சுகவேளை - Athikalai Suga Velai Releasing at 11, Sep 2021 from Album / Movie நட்பு - Natpu (1986) Latest Song Lyrics