எனது காதல் கனவில் - En Kadhal Kanavil Song Lyrics

எனது காதல் கனவில் - En Kadhal Kanavil

எனது காதல் கனவில் - En Kadhal Kanavil


Lyrics:
எனது காதல் கனவில் மலர்ந்த தேன் பூவே
இளமை அழகில் கவிதை எழுதும் மான் நீயே
ஸ்ருதி லயம் எனக் கூடும்
ஸ்வரங்களில் சுகம் பாடும் கவிதையே வா இங்கே
எனது காதல் கனவில் மலர்ந்த தேன் பூவே
இளமை அழகில் கவிதை எழுதும் மான் நீயே
வர்ணங்கள் வந்தாடும் பொன் வானமே
பொன்னாரம் சூடாத பூ மேகமே
நான் இன்று பாடாத சங்கீதமே ம்ஹூம் ம்ஹூம்
என் தேவியே....
ராகங்கள் வந்தாடும் சங்கீதமே
நாள் தோறும் என் நெஞ்சில் உன் மோகமே
நானென்றும் நீயென்றும் வேறில்லையே ம்ஹூம் ம்ஹூம்
என் தேவியே....
எனது காதல் கனவில் மலர்ந்த தேன் பூவே
இளமை அழகில் கவிதை எழுதும் மான் நீயே
ஸ்ருதி லயம் எனக் கூடும்
ஸ்வரங்களில் சுகம் பாடும் கவிதையே வா இங்கே
எனது காதல் கனவில் மலர்ந்த தேன் பூவே
இளமை அழகில் கவிதை எழுதும் மான் நீயே

எனது காதல் கனவில் - En Kadhal Kanavil Song Lyrics, எனது காதல் கனவில் - En Kadhal Kanavil Releasing at 11, Sep 2021 from Album / Movie மை டியர் லீசா - My Dear Lisa (1987) Latest Song Lyrics