கடவுள் எதுக்கு காதல் - Kadavul Ethukku Song Lyrics

கடவுள் எதுக்கு காதல் - Kadavul Ethukku

கடவுள் எதுக்கு காதல் - Kadavul Ethukku


Lyrics:
கடவுள் எதுக்கு காதல் இருக்கு வாழ்ந்திடுவேன்
ரணங்கள் கூட சுகமா இருக்கு தாங்கிடுவேன்
காதல் ஒரு கைக்குழந்தைதான்
தாயைக் கண்டால் கட்டிக் கொள்ளும் தான்
தாயைப் போல தான் என்னைத் தாங்கிக் கொள்கிறாய்
எந்த நூலையும் நீதான் வாங்கிக் கொள்கிறாய்
நன்றி சொல்லணும் நான் உனக்கு
கடவுள் எதுக்கு காதல் இருக்கு வாழ்ந்திடுவேன்
ரணங்கள் கூட சுகமா இருக்கு தாங்கிடுவேன்
வாழும் போதே சாகவும் வழிகள் சொல்லும் மானுடம்
காதல் தான் இல்லையேல் பூமி என்ன ஆகுமோ
இரண்டு இதயம் இல்லை மாற்றி கொண்டு வாழ
இரண்டு பிறவி இல்லை உன்னை பிரிந்து சேர
உன்னை இன்றி நானிங்கே என்ன கேட்கப் போகிறேன்
கருவறை இன்றியே சுமக்கின்றாய் நீ என்னை
காதல் காவல் இருக்கு மரணம் இல்லை எனக்கு
இந்த உலகம் எதுக்கு நீதான் உலகம் எனக்கு
கடவுள் எதுக்கு காதல் இருக்கு வாழ்ந்திடுவேன்
ரணங்கள் கூட சுகமா இருக்கு தாங்கிடுவேன்

கடவுள் எதுக்கு காதல் - Kadavul Ethukku Song Lyrics, கடவுள் எதுக்கு காதல் - Kadavul Ethukku Releasing at 11, Sep 2021 from Album / Movie தீ நகர் - Thee Nagar (2007) Latest Song Lyrics