மேகம் கொட்டட்டும் - Megam Kottatum Song Lyrics

மேகம் கொட்டட்டும் - Megam Kottatum

மேகம் கொட்டட்டும் - Megam Kottatum


Lyrics:
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
ராகங்கள் தீராது
பாடாமல் போகாது
வானம்பாடி ஓயாது
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
ராகங்கள் தீராது
பாடாமல் போகாது
வானம்பாடி ஓயாது
எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கைத்தட்டும்
தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும்
நிஜமழையை இசைமழையால் நனைத்திடுவோம் நாங்கள்
குளிரெடுத்தால் வானத்திற்கே குடைகொடுங்கள் நீங்கள்
பாட்டுக்கள் வான்வரை கேட்குமே
என் ஆட்டத்தில் மின்னலும் தோற்குமே
மழை சிந்தும் நீரும் தேனே
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
ராகங்கள் தீராது
பாடாமல் போகாது
வானம்பாடி ஓயாது
மழை வந்ததாலே இசை நின்று போகுமா
புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமா
ராகங்களால் தீபங்களை ஏற்றிவைத்தான் தான்சேன்
ராகங்களால் மேகங்களை நான் நிறுத்திவைப்பேன் என்பேன்
ரசிகனின் ஆர்வத்தைப் பார்க்கிறேன்
உங்கள் பாதத்தில் என்தலை சாய்க்கிறேன்
இசை எந்தன் ஜீவன் என்பேனே
லாலா லல்லல்லா லாலாலாலா
லாலா லல்லல்லா லாலாலாலா

மேகம் கொட்டட்டும் - Megam Kottatum Song Lyrics, மேகம் கொட்டட்டும் - Megam Kottatum Releasing at 11, Sep 2021 from Album / Movie எனக்குள் ஒருவன் - Enakkul Oruvan (1984) (1984) Latest Song Lyrics