மூங்கில் தோட்டம் - Moongil Thottam Song Lyrics

மூங்கில் தோட்டம் - Moongil Thottam

மூங்கில் தோட்டம் - Moongil Thottam

Artist: Vairamuthu ,

Album/Movie: கடல் - Kadal (2013)


Lyrics:
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனி விழும் காடு
ஒத்தையடி பாத உன் கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
குளத்தாங்கரையில குளிக்கும் பறவைக
சிறகு உலத்துமே துளிக தெறிக்குமே
முன்கோபம் விடுத்து முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க நான் உன்ன அணைக்க
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க
ரத்தம் உறையும் குளிரும் இருக்க
உஷ்ணம் யாசிக்கும் உடலும் இருக்க
ஒத்த போர்வையில இருவரும் இருக்க
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனி விழும் காடு
ஒத்தையடி பாத உன் கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே

மூங்கில் தோட்டம் - Moongil Thottam Song Lyrics, மூங்கில் தோட்டம் - Moongil Thottam Releasing at 11, Sep 2021 from Album / Movie கடல் - Kadal (2013) Latest Song Lyrics