நான் மாந்தோப்பில் - Naan Maanthoppil Song Lyrics

நான் மாந்தோப்பில் - Naan Maanthoppil

நான் மாந்தோப்பில் - Naan Maanthoppil


Lyrics:
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவன் மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும் வாங்கவில்லை
இந்த கன்னம் வேண்டுமென்றான்
நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாக நின்றிருந்தேன்
அவள் மோகம் என்று சொன்னாள்
ஒன்று கேட்டால் என்ன கொடுத்தால் என்ன
குறைந்தா போய் விடும் என்றான்
கொஞ்சம் பார்த்தால் என்ன பொறுத்தால் என்ன
மறந்தா போய்விடும் என்றாள்
(நான் மாந்தோப்பில்…)
அவன் தாலி காட்டும் முன்னாலே தொட்டாலே போதும்
என்றே துடி துடிச்சான்
அவள் வேலிகட்டும் முன்னாலே வெள்ளாமை ஏது
என்றே கதை படிச்சா
அவன் காதலுக்கு பின்னாலே கல்யாணம் வருமே
என்றே கையடிச்சான்
அவள் ஆகட்டும் என்றே ஆசையில் நின்றே
அத்தானின் காதைக் கடிச்சா
(நான் மாந்தோப்பில்…)
அவன் பூவிருக்கும் தேனெடுக்க பின்னாலே வந்து
வண்டாய் சிறகடிச்சான்
அவள் தேனெடுக்க வட்டமிடும் மச்சானை பிடிக்க
கண்ணாலே வலை விரிச்சா
அவன் ஜோடிகுயில் பாடுவதை சொல்லாமல் சொல்லி
மெதுவா அணைச்சுக்கிட்டான்
அவள் ஆடியிலே பெண்ணாகி அஞ்சாறு மாசத்துல
அழகாத் தெரிஞ்சுக்கிட்டா
(நான் மாந்தோப்பில்…)

நான் மாந்தோப்பில் - Naan Maanthoppil Song Lyrics, நான் மாந்தோப்பில் - Naan Maanthoppil Releasing at 11, Sep 2021 from Album / Movie எங்க வீட்டுப் பிள்ளை - Enga Veettu Pillai (1965) Latest Song Lyrics