நலம் வாழ எந்நாளும் - Nalam Vaazha Ennaalum Song Lyrics

நலம் வாழ எந்நாளும் - Nalam Vaazha Ennaalum
Artist: S. P. Balasubramaniam ,Vaali ,
Album/Movie: மறுபடியும் - Marupadiyum (1993)
Lyrics:
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
ஓ ஹோ...ஹோ.. ஓ ஹொ..ஹோ...
ஓ ஹோ...ஹோ..
***
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம்
எதற்கிந்த சோகம் கிளியே..
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
***
கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி..
மறுவாசல் வைப்பான் இறைவன்
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
ஓ ஹோ...ஹோ.. ஓ ஹொ..ஹோ...
ஓ ஹோ...ஹோ..
***
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம்
எதற்கிந்த சோகம் கிளியே..
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
***
கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி..
மறுவாசல் வைப்பான் இறைவன்
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
Releted Songs
நலம் வாழ எந்நாளும் - Nalam Vaazha Ennaalum Song Lyrics, நலம் வாழ எந்நாளும் - Nalam Vaazha Ennaalum Releasing at 11, Sep 2021 from Album / Movie மறுபடியும் - Marupadiyum (1993) Latest Song Lyrics