பார்த்த ஞாபகம் - Paartha Gnaabagam Song Lyrics

பார்த்த ஞாபகம் - Paartha Gnaabagam

பார்த்த ஞாபகம் - Paartha Gnaabagam


Lyrics:
ஆஹா அஹ அஹ ஹா
ஆஹா அஹ அஹ ஹா
ஆஹா அஹ அஹ ஹா
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
(இசை)
அந்த நீள நதிக் கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
(இசை)
அந்த நீள நதிக் கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ
(இசை)
இந்த இரவை கேள் அது சொல்லும்
அந்த நிலவை கேள் அது சொல்லும்
உந்தன் மனதை கேள் அது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
(இசை)
அன்று சென்றதும் மறந்தாய் உறவாய்
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ

பார்த்த ஞாபகம் - Paartha Gnaabagam Song Lyrics, பார்த்த ஞாபகம் - Paartha Gnaabagam Releasing at 11, Sep 2021 from Album / Movie புதிய பறவை - Puthiya Paravai (1964) Latest Song Lyrics