புதியதோர் உலகம் - Pudhiyadhor ulagam seivom Song Lyrics

புதியதோர் உலகம் - Pudhiyadhor ulagam seivom

புதியதோர் உலகம் - Pudhiyadhor ulagam seivom


Lyrics:
புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுஉடைமைக்கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம் (புதிய)
இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம்
புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்
புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

புதியதோர் உலகம் - Pudhiyadhor ulagam seivom Song Lyrics, புதியதோர் உலகம் - Pudhiyadhor ulagam seivom Releasing at 11, Sep 2021 from Album / Movie சந்திரோதயம் - Chandhrodhayam (1966) Latest Song Lyrics