சாதி என்னும் கொடுமை - Sathi Ennum Kodumai Song Lyrics

சாதி என்னும் கொடுமை - Sathi Ennum Kodumai

சாதி என்னும் கொடுமை - Sathi Ennum Kodumai


Lyrics:
சாதி என்னும் கொடுமை இந்த
நாட்டை என்று விடுமோ
வீதிக்கு வீதி வந்து
பேதை உயிர் கொண்டு செல்லுமோ
ஆதியில் இல்லாத சாதியும்
பாதியில் வந்ததென்ன தொல்லையே
சாதி என்னும் பேயை ஓட்டிடும்
சத்தியப் பூசாரி இங்கில்லையே..(சாதி)
உன்னையும் என்னையும் பெற்றது
அன்னை தந்தை சாதி அல்ல
உண்ண உறங்கிட காப்பது
மண் மகளே சாதி அல்ல
நன்மையும் உண்மையும்
நித்தமும் சாகுது சாதியினால்
அன்பு பண்பு எனும் நற்குணம்
வேகுது சாதியினால்
காற்று என்னும் சாதி
தீ என்னும் சாதியை தீண்டாவிடில்
நிலம் என்னும் சாதியும்
நீர் என்னும் சாதியை தீண்டாவிடில்
நீயும் நானும் இல்லை
மண்ணில் உயிரும் இல்லை ஞானப் பெண்ணே..(சாதி)

சாதி என்னும் கொடுமை - Sathi Ennum Kodumai Song Lyrics, சாதி என்னும் கொடுமை - Sathi Ennum Kodumai Releasing at 11, Sep 2021 from Album / Movie திருநெல்வேலி - Thirunelveli (2000) Latest Song Lyrics