செவ்வானம் சின்னப் பெண் - Sevvaanam Chinna Pen Song Lyrics

செவ்வானம் சின்னப் பெண் - Sevvaanam Chinna Pen

செவ்வானம் சின்னப் பெண் - Sevvaanam Chinna Pen


Lyrics:
செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ
கண்ணால் உன்னை வரவேற்று
பொன் கவிக் குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு
என் வண்ணக்கிளி சாயாதோ
செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ
பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்
மொத்தத்தில் காதலின் எடை
என்னையாகும் இப்படி சோதிக்கிறாய்
நிலவை படைத்து முடித்த கையில்
அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்
என்னை படைத்து முடித்த கையில்
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்
செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ
செண்பகப் பூவின் மடல்களை
திறந்து தென்றல் தேடுவதென்ன
தென்றல் செய்த வேலையை
சொல்லி என்னை பார்ப்பதென்ன
பார்வையின் ஜாடை புரியாமல்
நீ பாட்டு பாடி ஆவதென்ன
பல்லவி சரணம் முடிந்தவுடன்
நாம் பங்குபெறும் காட்சியென்ன
செவ்வானம் சின்னப் பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ

செவ்வானம் சின்னப் பெண் - Sevvaanam Chinna Pen Song Lyrics, செவ்வானம் சின்னப் பெண் - Sevvaanam Chinna Pen Releasing at 11, Sep 2021 from Album / Movie பவித்ரா - Pavithra (1994) Latest Song Lyrics