சொக்கிப் போறான்டி - Sokki Poraandi Song Lyrics

சொக்கிப் போறான்டி - Sokki Poraandi

சொக்கிப் போறான்டி - Sokki Poraandi


Lyrics:
சொக்கிப் போறான்டி வெட்கிப்போறான்டி
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்
செக்கச்செவ்வானம் வெட்கப்படும்போது
உன் கண்ணத்தை கடன் வாங்க ஓடி வரும்
கொத்தோடு கிளையோடு பூப்பூக்கும் வாசம் போல்
காத்தோடு உன் சுவாசம் தேடிப்போறேன்
குலசாமி திரு நீரு வெச்சாலும் சிலிர்க்காம
நீத்தொட்டா அங்கங்க சிலிர்த்துப்போறேன்
உன் கண் ஜாடை அசைவுக்கும்
கால் கொலுசு நெலிவுக்கும்
அடி போடி பெண்ணே கொடைசாஞ்சுப்போனேன்
நீ பார்க்காத நேரத்தில் நான் உன்னப்பார்த்துதான்
நீ பார்க்கும் போது அலைபாஞ்சுப்போறேன்
ஏ தீக்குச்சி தலமேல பாரத்தப்போல
என் நெஞ்சோடு ஒரு பாரம் தந்தாயடா
என் தூக்கத்தப்பல நாளா நீ வாங்கிப்போறாயே
படுத்தாலும் கனவோடு வந்தாயடா…… (சொக்கி)
ஏ பஞ்சாரத்து வெடக்கோழிப்போல
என் நெஞ்சோரம் வாசம் துள்ளுதோடி
ஏ பஞ்சாங்கத்தில் நாள் பார்க்கச்சொல்லி
உன் கண்ணோரம் கதைப்பேசி சொல்லுதோடி
ஏ காதோரத்தில் ஒரு பிச்சி வந்து
தினம் உன் பேர சொல்லித்தான் கூவுதடா
ஏ தொடுந்தூரத்தில் நீ வரும்போதெல்லாம்
நான் விடும் மூச்சில் அணலாக கொல்லுதடா
பஞ்சால மேல தான் தீ மூட்டிப்போறியே
அய்யய்யய்யோ அங்கங்க எரியுதடி
அஞ்சாறு முத்தத்த நீத்தந்து போனினா (சொக்கி)
ஹேய் உன் கூடத்தான் தினம் தனியாவே தான்
அட நாம் வாழும் வரம் ஒன்று வேணுமடா
ஹே உன் மார்பில்தான் இரு கண்மூடித்தான்
அட நான் தூங்க இடம்மொன்னு வேணுமடா
ஹே ஆகாசத்தில் ஒரு மெத்த போட்டு
அங்க உன் கூட வெளையாட தோனுதடி
ஏ ஆனந்தத்தில் என் காலு ரெண்டும்
அடி என் பேச்சக்கேட்காமல் துள்ளுதடி
கடிகாரம் இல்லாம நொடி நேரம் ஓடாம
இங்கேயே இப்போதே நின்றால் என்ன
மடி மீது நான் சாய தாயாக நீ மாறி
தாலாட்டி பாட்டொன்று சொன்னால் என்ன (சொக்கி)

சொக்கிப் போறான்டி - Sokki Poraandi Song Lyrics, சொக்கிப் போறான்டி - Sokki Poraandi Releasing at 11, Sep 2021 from Album / Movie முப்பரிமானம் - Mupparimanam (2017) Latest Song Lyrics