டெலிபோன் மணி போல் - Telephone Mani Pol Song Lyrics

டெலிபோன் மணி போல் - Telephone Mani Pol

டெலிபோன் மணி போல் - Telephone Mani Pol


Lyrics:
டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மகளா
டிஜிட்டலில் செதுக்கிய குரலா
எலிசபெத் டெய்லரின் மகளா
சாகிர் ஹுசைன் தபலா இவள்தானா
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செல்லூலர் ஃபோனா
கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா
டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்பௌன் மலர் போல் மெல்லிய மகளா
நீயில்லை என்றால் வெயிலுமடிக்காது
துளி மழையுமிருக்காது
நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது
ஒரு சம்பவம் எனக்கேது
உன் பேரை சொன்னால்
சுவாசம் முழுதும் சுகவாசம் வீசுதடி
உன்னை பிரிந்தாலே
வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி
நீரில்லை என்றால்
அருவி இருக்காது மலை அழகு இருக்காது
நீ இல்லாமல் போனால்
இதயம் இருக்காது என் இளமை பசிக்காது
வெள்ளை நதியே
உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆட விடு
வெட்கம் வந்தால்
கூந்தல் கொண்டு உனைக் கொஞ்சம் மூடி விடு
டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மகளா
உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன்
அந்த சுகத்தைத் தர மாட்டேன்
உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன்
அதை வெயிலில் விட மாட்டேன்
பெண்கள் வாசம் என்னைத் தவிர இனி வீசக்கூடாது
அன்னை தெரசா அவரை தவிர பிறர் பேசக்கூடாது
நீ போகும் தெருவில் ஆண்களை விட மாட்டேன்
சில பெண்களை விட மாட்டேன்
நீ சிந்தும் சிரிப்பை காற்றில் விட மாட்டேன்
அதை கவர்வேன் தர மாட்டேன்
புடவை கடையில்
பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது
காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்ட கூடாது
டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மகளா
டிஜிட்டலில் செதுக்கிய குரலா
எலிசபெத் டெய்லரின் மகளா
சாகிர் ஹுசைன் தபலா இவள்தானா
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செல்லூலர் ஃபோனா
கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா

டெலிபோன் மணி போல் - Telephone Mani Pol Song Lyrics, டெலிபோன் மணி போல் - Telephone Mani Pol Releasing at 11, Sep 2021 from Album / Movie இந்தியன் - Indian (1996) Latest Song Lyrics