தாலாட்டு - Thaalaattu Song Lyrics

தாலாட்டு - Thaalaattu

தாலாட்டு - Thaalaattu


Lyrics:
தாலாட்டு…..
பிள்ளை உண்டு தாலாட்டு
மணித்தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு
சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு
பாராட்டு…..
அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல
பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்
தாலாட்டு…..
நான் படைத்த தேன் மழலை
நலமுடன் வளர்ந்து வர வேண்டும்
வான் படைத்த முழு நிலவாய்
வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும்
மான் படைத்த மைவிழியே
இன்னொரு பிள்ளை பெறவேண்டும்
ஒன்றோ ரெண்டோ பிள்ளை
என்றால் இன்பம் கொள்ளை
மெய் சிலிர்த்திட மகன் படிப்பது
மழலை என்ற மந்திரம்
யாழிசையிலும் ஏழிசையிலும்
இல்லை இந்த மோகனம்
தாலாட்டு…..
பிள்ளை உண்டு தாலாட்டு
உந்தன் பேர் சொல்ல
பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்
தாலாட்டு…..
வாழ்க்கையிலே வழக்குகளை
என் மகன் நாளை தீர்த்து வைப்பான்
வருத்தமுரும் மானிடர்க்கு
மருத்துவம் செய்து மகிழ்ந்திருப்பான்
நாம் வளர்த்த கனவுகளை
நனவாய் நிஜமாய் ஆக்கி வைப்பான்
கண்ணன் வண்ணம் கண்டு
துள்ளும் உள்ளம் ரெண்டு…
தென் பொதிகையில் நின்றுலவிடும்
தென்றல் போல வந்தவன்
செந்தமிழினில் சிந்திசைக்க
சந்தம் கொண்டு தந்தவன்
பாராட்டு…..
அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல
பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்

தாலாட்டு - Thaalaattu Song Lyrics, தாலாட்டு - Thaalaattu Releasing at 11, Sep 2021 from Album / Movie அச்சாணி - Achchani (1978) Latest Song Lyrics