தேன் பூவே பூவே வா - Then Poove Song Lyrics

தேன் பூவே பூவே வா - Then Poove

தேன் பூவே பூவே வா - Then Poove


Lyrics:
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடு தான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பனி விழும் புல்வெளியில் தினம் தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
ஹோய்...கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
ஹஹ்ஹ..காதல் யோகம் தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடு தான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா
லால...லா...லா..
லா...லால..லால....லா...லால..லா...லா..

தேன் பூவே பூவே வா - Then Poove Song Lyrics, தேன் பூவே பூவே வா - Then Poove Releasing at 11, Sep 2021 from Album / Movie அன்புள்ள ரஜனிக்காந் - Anbulla Rajinikanth (1984) Latest Song Lyrics