விளக்கு வைப்போம் - Vilakku Vaipom Song Lyrics

விளக்கு வைப்போம் - Vilakku Vaipom

விளக்கு வைப்போம் - Vilakku Vaipom


Lyrics:
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ
திரி எடுத்து நெய் விட்டு நெய் விட்டு
தித்திக்கும் முத்துசுடர் ஆட
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
மரக்கிளையில் காற்றில் ஆடும்
மஞ்சள் கொடியே
ஒஹோ ஹோ ஒஹோ ஹோ
மனக்குறையை தீர்த்து வைக்கும்
மணிக் கொடியே
ஒஹோ ஹோ ஒஹோ ஹோ
குலமகளே கூடி நின்று
குலவையிட்டு பாடுவோம்
கொலுசு ஒளிக்க கோயில் முன்னே
கும்மிக்கொட்டி ஆடுவோம்
இருக்குதொரு சாமி தான்
ஓஹோ ஓஹோ ஒஹோ
உலகறிஞ்ச சேதி தான்
ஓஹோ ஓஹோ ஒஹோ
மறைஞ்சிருக்கும் நிறைஞ்சிருக்கும்
மறுப்பவங்க யாரு கூறடி
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
தலையெடுத்து தீமையெல்லாம்
தத்திக் குதிச்சா
ஒஹோ ஹோ ஒஹோ ஹோ
களையெடுத்து காத்திருப்பா
அம்மன் நினைச்சா
ஒஹோ ஹோ ஒஹோ ஹோ
அலைகடலை ஆணையிட்டு
அடக்கிடுவோர் யாரடி
அருமையிலுள்ள ஆதிசக்தி
பெருமைகளை கூறடி
நாத்திகத்தை பேசிட
ஓஹோ ஓஹோ ஒஹோ
நாக்கு தந்தது யாரடி
ஓஹோ ஓஹோ ஒஹோ
மறைஞ்சிருக்கும் நிறைஞ்சிருக்கும்
மறுப்பவங்க யாரு கூறடி
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ
திரி எடுத்து நெய் விட்டு நெய் விட்டு
அடி தித்திக்கும் முத்துசுடர் ஆட
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
குலம் விளங்க விளக்கு வைப்போம்
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ
ஒஹோ ஒஹோ ஹோ ஹோ ஹோ

விளக்கு வைப்போம் - Vilakku Vaipom Song Lyrics, விளக்கு வைப்போம் - Vilakku Vaipom Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆத்மா - Aathmaa (1993) Latest Song Lyrics