ஏயா என் கோட்டிக்காரா - Yeya En Kottikkaara Song Lyrics

ஏயா என் கோட்டிக்காரா - Yeya En Kottikkaara

ஏயா என் கோட்டிக்காரா - Yeya En Kottikkaara


Lyrics:
ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காராா
குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் ஜோட்டுக்காரா
யே ஏட்டி என் கோட்டிக்காரி
அடி ஏலா என் வேட்டைக்காரி
குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டைக்காரி
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் ஜோட்டுக்காரி
தேடி சேர்த்தக் காசப் போல்
காதல் இருக்குதா
கொஞ்சமாக எடுக்குற
கஞ்சம் தடுக்குதா
காசப் போல காதலும் செலவுக்கில்லட்டீ
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டீ
சின்னப் புள்ள நான்தான்
பெண்ணே உண்மை அல்லோ
என்னத் தாங்க இப்போ
மூணு அம்மை அல்லோ
பாலருவியும் தேனருவியும் ஐந்தருவியும்
உன் நேசத்தின் முன்னே முன்னே தோத்தே போகும்
மண்ணில் சொர்கமிது
ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காரா
குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் ஜோட்டுக்காரா
காசப் போல காதலும் செலவுக்கில்லட்டீ
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டீ
தட்டான் பூச்சி போல
வண்ணம் அள்ளி தாற
கண்ணில் இன்னும் வேற
ஏதோ சொல்லித் தாற
நான் நினைச்சதும் நீ நினைச்சதும்
நூலிழையில் தான் வழுக்கிட
பேசி பேசி இன்னும் பேசி
பேசா நிலை வருமோ
தேடிச் சேர்த்த காச போல்
காதல் இருக்குதா
கொஞ்சமாக எடுக்குற
கஞ்சம் தடுக்குதா
காச போல காதலும் செலவுக்கில்லட்டீ
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டீ

ஏயா என் கோட்டிக்காரா - Yeya En Kottikkaara Song Lyrics, ஏயா என் கோட்டிக்காரா - Yeya En Kottikkaara Releasing at 11, Sep 2021 from Album / Movie பாபநாசம் - Papanasam (2015) Latest Song Lyrics