அன்னையின் கருவில் கலையாமல் - Annaiyin Karuvil Kaliyamal Song Lyrics

அன்னையின் கருவில் கலையாமல் - Annaiyin Karuvil Kaliyamal

அன்னையின் கருவில் கலையாமல் - Annaiyin Karuvil Kaliyamal


Lyrics:
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே
கஷ்டங்களை தாங்கு வெற்றி உண்டு
மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு
கனவுகள் காணு தூக்கம் கொன்று
நடந்திடும் என்று நம்பி இன்று
விதைக்குள் தூங்கும் ஆல மரம்
கண்ணுக்குத் தெரியாது
அது மரமாய் வளரும் காலம் வரும்
மண்ணுக்கும் உறங்காது
நீ தேடும் சிகரம் தூரம் இல்லை
நடப்பதை நிறுத்தாதே
வெறும் துளி தான் இங்கே கடலாகும்
நம்பிக்கை தொலைக்காதே
மீண்டும் மீண்டும் பாதம் பட்டால்
பாறை கூட பாதை ஆகும்
முன்னால் வைத்த காலை நீயும்
பின்னால் எடுக்காதே
பூக்கள் பூக்க வேர்கள் தேவை
வெற்றிக்கிங்கே வேண்டும் வேர்வை
உன் கை ரேகை தேய்ந்தா போகும்
உழைப்பதை நிறுத்தாதே…(அன்னையின்)
உன்னால் என்ன முடியும் என்று
உனக்கே தெரியாது
உன் சக்தியை நீயும் புரிந்து கொண்டால்
சாதிக்க தடை ஏது
முயற்சிகள் செய்து தோற்பதெல்லாம்
தோல்விகள் கிடையாது
விழுந்து விடாமல் யாரும் இங்கே
எழுந்தது கிடையாது
இல்லை என்ற சொல்லை கூட
இல்லை என்று தூக்கிப் போடு
நாளை உன்னை மேலே ஏற்றும்
துணிச்சலை இழக்காதே
வீழ்ந்தால் கூட பந்தாய் மாறு
வேகம் கொண்டு மேலே ஏறு
முந்திக் கொண்டு முன்னால் ஓடு
முயற்சியை நிறுத்தாதே....(அன்னையின்)

அன்னையின் கருவில் கலையாமல் - Annaiyin Karuvil Kaliyamal Song Lyrics, அன்னையின் கருவில் கலையாமல் - Annaiyin Karuvil Kaliyamal Releasing at 11, Sep 2021 from Album / Movie ஹரிதாஸ் - Haridas (2013) Latest Song Lyrics