அழகாக கண்ணுக்கு - Azhagaga Kannukku Song Lyrics

அழகாக கண்ணுக்கு - Azhagaga Kannukku

அழகாக கண்ணுக்கு - Azhagaga Kannukku


Lyrics:
பெண் : அழகாக கண்ணுக்கு
அழகாக கற்பக சோலை கன்னி
வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு அழகாக
பெண் : நினைவாக ஆஆ
பெண்ணின் நினைவாக
இங்கே கண்கள் நான்கும்
மயங்குமா பெண்ணின்
நினைவாக ஆஆ பெண்ணின்
நினைவாக
பெண் : { மோக கவிதைக்கு
முன்னுரை தீட்டிடும் நாத
சலங்கைகள் கொண்டு மலர்
செண்டு மனம் கண்டு } (2)
பெண் : முத்து பதித்த ஒரு
இரத்தின பல்லக்கு வந்தது
போல் வந்து நின்று வட்டம்
இடுவதை தட்டி பறித்திட
வாடுது உள்ளங்கள் ரெண்டு
பெண் : அழகாக கண்ணுக்கு
அழகாக கற்பக சோலை கன்னி
வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு அழகாக
பெண் : { நீருண்ட
மேகத்தின் ஊர்வலம்
போல் வந்து சீர்கொண்ட
கூந்தலை கண்டு மது
உண்டு மனம் கொண்டு } (2)
பெண் : மஞ்சள் முகத்தினில்
மாணிக்க மூக்குத்தி கொஞ்சிடும்
ஜோதியில் நின்று தஞ்சம்
அடையவும் தம்மை மறக்கவும்
கெஞ்சுது உள்ளங்கள் ரெண்டு
பெண் : அழகாக கண்ணுக்கு
அழகாக கற்பக சோலை கன்னி
வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு அழகாக

அழகாக கண்ணுக்கு - Azhagaga Kannukku Song Lyrics, அழகாக கண்ணுக்கு - Azhagaga Kannukku Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆதி பராசக்தி - Aathi Parasakthi (1971) Latest Song Lyrics