சித்திரச் சோலைகளே - Chittirai Solaigale Song Lyrics

சித்திரச் சோலைகளே - Chittirai Solaigale

சித்திரச் சோலைகளே - Chittirai Solaigale


Lyrics:
சித்திரச் சோலைகளே
உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே
சித்திரச் சோலைகளே
உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள்
ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே...
உங்கள் வேரினிலே...
தாமரை பூத்த தடாகங்களே
உமை தந்த அக்காலத்திலே
தாமரை பூத்த தடாகங்களே
உமை தந்த அக்காலத்திலே
எங்கள் தூய்மைச் சகோதரர்
தூர்ந்து மறைந்ததைச் சொல்லவோ ஞாலத்திலே
சொல்லவோ ஞாலத்திலே
சித்திரச் சோலைகளே
உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள்
ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே...
உங்கள் வேரினிலே...
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே
உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ
நீங்கள் ஊர் தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ
உதித்தது மெய் அல்லவோ...
தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு
சாட்சியும் நீயன்றோ
பசி தீரும் என்றால்
உயிர் போகும் எனச் சொல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ
செல்வர்கள் நீதி நன்றோ
சித்திரச் சோலைகளே
உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள்
ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே...
உங்கள் வேரினிலே...
கீர்த்தி கொள் போகப் பொருட்புவியே
உன்றன் கீழிருக்கும் கடைக்கால்
எங்கள் சீர் தொழிலாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள் தோல்
நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
நின்ற இயற்கைகளே
உம்மைச் சாரும் புவிப் பொருள் தந்ததெவை
தொழிலாளார் தடக் கைகளே
நித்தம் திருத்திய நேர்மையினால்
மிகு நெல்விளை நன்னிலமே
உனக்கெத்தனை மாந்தர்கள்
நெற்றி வியர்வை இறைத்தனர் காண்கிலமே
மாமிகு பாதைகளே
உமை இப்பெரு வையமெலாம் வகுத்தார்
அவர் ஆமை எனப் புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம் உழைத்தார்

சித்திரச் சோலைகளே - Chittirai Solaigale Song Lyrics, சித்திரச் சோலைகளே - Chittirai Solaigale Releasing at 11, Sep 2021 from Album / Movie நான் ஏன் பிறந்தேன் - Naan Yen Pirandhen (1972) Latest Song Lyrics