என் நெஞ்சிலே வந்ததே - En Nenjile Vandhathae Song Lyrics

என் நெஞ்சிலே வந்ததே - En Nenjile Vandhathae

என் நெஞ்சிலே வந்ததே - En Nenjile Vandhathae


Lyrics:
ஆண் : என் நெஞ்சிலே வந்ததே பாட்டு
உன் கண்களின் சம்மதம் கேட்டு
நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே
வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே
மொட்டுக்கள் திறக்கட்டுமே....
பெண் : என் நெஞ்சிலே வந்ததே பாட்டு
உன் கண்களின் சம்மதம் கேட்டு
நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே
வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே
மொட்டுக்கள் திறக்கட்டுமே....
ஆண் : ஹே மல்லிகை அருகினில் வா என்றது
பெண் : நீ வந்ததும் மனமிது ஏன் துள்ளுது
ஆண் : ஹோ மோகம் உனை முத்தாடுது
தேகம் துணை கேட்டாடுது
பெண் : கண்ணா இதை யார் சொன்னது
எந்தன் மனம் யார் கண்டது
ஆண் : பூங்கொடியை தென்றல் அறியும்
என் மனது உன்னை அறியும்
பெண் : போதும் விளக்கம் அது புரியும் எனக்கும்
ஆண் : ஹேய் வாழும் வரைக்கும்
அதில் ஆசையிருக்கும்
தேவியே பாடவா மோக ராகம்
பெண் : என் நெஞ்சிலே வந்ததே பாட்டு
ஆண் : உன் கண்களின் சம்மதம் கேட்டு
பெண் : நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே
ஆண் : வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே
பெண் : மொட்டுக்கள் திறக்கட்டுமே....
பெண் : பொன் மாளிகை அழகினை பார் என்றது
ஆண் : பொன் வீதியில் மன்மதன் தேர் வந்தது
பெண் : ரோஜா மலர் செண்டாடுது ராஜா மனம் பந்தாடுது
ஆண் : வஞ்சிக் கொடி நின்றாடுது தஞ்சமென மன்றாடுது
பெண் : பூவெடுத்து மாலை தொடுக்க
நீ வரலாம் தேதி குறிக்க
ஆண் : தொட்டுப் பிடிப்போம்
புது சொர்க்கம் அமைப்போம்
பெண் : சோலைக் குயில் போல்
வனம் சுற்றிக் கிடப்போம்
தேவனே பாடவா மோக ராகம்
ஆண் : என் நெஞ்சிலே வந்ததே பாட்டு
பெண் : உன் கண்களின் சம்மதம் கேட்டு
ஆண் : நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே
பெண் : வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே
ஆண் : மொட்டுக்கள் திறக்கட்டுமே....

என் நெஞ்சிலே வந்ததே - En Nenjile Vandhathae Song Lyrics, என் நெஞ்சிலே வந்ததே - En Nenjile Vandhathae Releasing at 11, Sep 2021 from Album / Movie வெற்றி மேல் வெற்றி - Vetri Mel Vetri (1989) Latest Song Lyrics