இந்த நாள் நல்ல - Indha Naal Nalla Naale Song Lyrics

இந்த நாள் நல்ல - Indha Naal Nalla Naale

இந்த நாள் நல்ல - Indha Naal Nalla Naale


Lyrics:
பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா
ஆண் : என் கவிதைகள் தோன்றும் உன் சிரிப்பினிலே
என் மனதினில் என்றும் உன் நினைவுகளே
பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா
ஆண் : இளமை துடிப்பில் வந்து
ஏக்கம் பிறக்குது இதழில் கவிதை எழுது
பெண் : தனிமை நெருப்பில் இந்த
தேகம் கொதிக்குது தழுவ துடிக்கும் வயது
ஆண் : ரோஜா மலர்களில் பனித்துளி என வந்து
நானும் விழுந்திடவா
பெண் : ராஜா மடியினில் விடிகிற வரையினில்
நானும் உறங்கிடவா
ஆண் : மயக்கும் பூங்கொடி தயக்கம் ஏனடி
பெண் : மஞ்சம் அழைக்குது நெஞ்சம் தவிக்குது
ஆண் : மஞ்சம் அழைக்குது நெஞ்சம் தவிக்குது
தினம் ஒரு கவி படிப்போம்
பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா
ஆண் : என் கவிதைகள் தோன்றும் உன் சிரிப்பினிலே
என் மனதினில் என்றும் உன் நினைவுகளே
ஆண் : அழகு குலுங்க வரும் அன்னக்கொடி உன்னை
ரசிக்கும் எனது மனது
பெண் : உனது விழிகள் சொல்லும் மோகக் கதைகளை
அறியும் எனது மனது
ஆண் : ஏதோ நினைவினில் புதுவகை கனவினில்
இதயம் மகிழ்ந்திருக்கு
பெண் : காதல் அரசி அருகினில் இருக்கையில்
வேறோர் நினைவெதுக்கு
ஆண் : அழகின் சிரிப்பிலே ஆசை வளருது
பெண் : கண்கள் சிவக்குது உள்ளம் துடிக்குது
ஆண் : கண்கள் சிவக்குது உள்ளம் துடிக்குது
புது கதை தொடரட்டுமே
பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா
ஆண் : என் கவிதைகள் தோன்றும் உன் சிரிப்பினிலே
என் மனதினில் என்றும் உன் நினைவுகளே

இந்த நாள் நல்ல - Indha Naal Nalla Naale Song Lyrics, இந்த நாள் நல்ல - Indha Naal Nalla Naale Releasing at 11, Sep 2021 from Album / Movie வெற்றி மேல் வெற்றி - Vetri Mel Vetri (1989) Latest Song Lyrics