என்னை மறந்தேன் - Ennai Maranthaen Song Lyrics

என்னை மறந்தேன் - Ennai Maranthaen

என்னை மறந்தேன் - Ennai Maranthaen


Lyrics:
யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ….
என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
என்னை கேட்டேனே
உன்னை நினைத்து என்னை மறந்தேன்
எல்லாம் மறந்தேனே
என் பேரை மறந்தேன்
என் ஊரை மறந்தேன்
என் தோழிகளை மறந்தேனே!
என் நடை மறந்தேன்
என் உடை மறந்தேன்
என் நினைவினை மறந்தேனே!
அந்தி மாலை கோவில் மறந்தேன்
அதிகாலை கோலம் மறந்தேன்
ஏன் மறந்தேன்?
ஓஓஓஓஒ!
ஏன் என்னை மறந்தேன்?
நான் என்னை மறந்தேன்.
கண் திறந்தும் பார்க்க மறந்தேன்
கால் நடந்தும் பாதை மறந்தேன்
வாய் திறந்தும் பேச மறந்தேன்
நான் பண்பலையின் பாடல் மறந்தேன்
தினம் சண்டை போடும் தாயிடம் கெஞ்ச மறந்தேன்
என் குட்டித் தங்கை அவளிடம் கொஞ்ச மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் எதனால் மறந்தேன்?
யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ….
பெண் மனம் கவரும் கொற்றர்க்கே!
தாழ் பணிந்தேன்…. தாழ் பணிந்தேன்
படித்ததெல்லாம் பாதி மறந்தேன்
தேர்வறையில் மீதி மறந்தேன்
நாள் கிழமை தேதி மறந்தேன்
நான் மின்னஞ்சலின் சேதி மறந்தேன்
நான் என்னைப்பற்றி அவனிடம் சொல்ல மறந்தேன்
அவன் புன்னகையை மூட்டைக் கட்டி அள்ள மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் அவனால் மறந்தேன்?
யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ….

என்னை மறந்தேன் - Ennai Maranthaen Song Lyrics, என்னை மறந்தேன் - Ennai Maranthaen Releasing at 11, Sep 2021 from Album / Movie இவன் வேறமாதிரி - Ivan Veramathiri (2013) Latest Song Lyrics