காலத்தில் அழியாத - Kaalathil Azhiyatha Song Lyrics

காலத்தில் அழியாத - Kaalathil Azhiyatha

காலத்தில் அழியாத - Kaalathil Azhiyatha


Lyrics:
காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்
உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கம்
உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கம்
தளர்ச்சியில் விழலாகுமா மகனே சந்தனம் சேறாகுமா?
காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்
பல்லக்கு பரிவாரம் படையுடன் முடியும் உன்
சொல்லுக்கு விலையாகுமே மகனே உன்
தோளுக்குள் புவி ஆளுமே
ஊருக்குக் கதை சொல்வோர் உள்ளத்தை வதை செய்தால்
ஊருக்குக் கதை சொல்வோர் உள்ளத்தை வதை செய்தால்
சீர்பெறும் கவி வாடுமே மகனே
தெய்வத்தின் முகம் வாடுமே
காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்
வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும்
சக்கரம் சுழல்கின்றது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது
யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு
அது வரை பொறுப்பாயடா மகனே என்
அருகினில் இருப்பாயடா
காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்

காலத்தில் அழியாத - Kaalathil Azhiyatha Song Lyrics, காலத்தில் அழியாத - Kaalathil Azhiyatha Releasing at 11, Sep 2021 from Album / Movie மகாகவி காளிதாஸ் - Mahakavi Kalidas (1966) Latest Song Lyrics