கல்லாய் வந்தவன் - Kallai vanthavan Song Lyrics

கல்லாய் வந்தவன் - Kallai vanthavan

கல்லாய் வந்தவன் - Kallai vanthavan


Lyrics:
கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா
மந்தையில் மேய்கிற வெள்ளாடு
அந்தி சந்தைக்கு வந்தால் சாப்பாடு
பந்திக்கு முந்துற பெரும்பாடு
அது படிச்சவன் வகுத்த பண்பாடு
பந்திக்கு முந்துற பெரும்பாடு
அது படிச்சவன் வகுத்த பண்பாடு
கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா
ஆண்டியின் கையில் திருவோடு
தினம் அவனுக்கு வேலை தெருவோடு
இருப்பவன் சண்டை பொருளோடு
இந்த ஏழையின் சண்டை வயிறோடு
இருப்பவன் சண்டை பொருளோடு
இந்த ஏழையின் சண்டை வயிறோடு
கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா
காக்காய் உண்டு நரியுண்டு
வரிக்கழுதைகள் உண்டு புலியுண்டு
மனிதரில் இத்தனை வகையுண்டு
அவர் வாக்கினில் தெரியும் யாரென்று
கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா

கல்லாய் வந்தவன் - Kallai vanthavan Song Lyrics, கல்லாய் வந்தவன் - Kallai vanthavan Releasing at 11, Sep 2021 from Album / Movie மகாகவி காளிதாஸ் - Mahakavi Kalidas (1966) Latest Song Lyrics