கலைகள் மிகுந்த எங்கள் - Kalaigal Migundha Engal Song Lyrics

கலைகள் மிகுந்த எங்கள் - Kalaigal Migundha Engal
Artist: M. L. Vasanthakumari ,P. Leela ,
Album/Movie: ஆசை மகன் - Aasai Magan (1953)
Lyrics:
கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே - என்றும்
நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன் அருமை (கலை)
அலை மேவும் கடல் தந்த ஆரமுதே போல்
இணையே இல்லை எனவே இன் சுவையாகவே வளரும் (கலை)
கரும்பான காவியம் கம்பனின் பாடலே - தேன்
வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே
வீரன் பாரதி பாடல் அழகால் தேசம் உயர்வாகுமே..
கரும்பான காவியம் கம்பனின் பாடலே..
வள்ளுவன் குறளாலே வளர்ந்த தாய்மொழி
உள்ளம் கொள்ளை கொள்ளும் இலக்கியம் சேர்மொழி
தெள்ளுகவி மலர்கள் தேடி நிதம் தந்த
ஔவையும் இளங்கோவும் யாவரும் போற்றிய (கலைகள்)

Releted Songs
கலைகள் மிகுந்த எங்கள் - Kalaigal Migundha Engal Song Lyrics, கலைகள் மிகுந்த எங்கள் - Kalaigal Migundha Engal Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆசை மகன் - Aasai Magan (1953) Latest Song Lyrics