கல்யாண தேன் - Kalyana Thenila Song Lyrics

கல்யாண தேன் - Kalyana Thenila

கல்யாண தேன் - Kalyana Thenila


Lyrics:
ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
***
ஆண் : தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா
பெண் : என் அன்பு காதலா
எந்நாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா
ஆண் : பார்ப்போமே ஆவலா
வா வா நிலா.............
பெண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
ஆண் : நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
***
பெண் : உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதி கூண்டிலா
ஆண் : சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
பெண் : தேனூறும் வேர்ப்பலா
உன் சொல்லிலா..ஆ.ஆ...
ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
பெண் : தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

Releted Songs

கல்யாண தேன் - Kalyana Thenila Song Lyrics, கல்யாண தேன் - Kalyana Thenila Releasing at 11, Sep 2021 from Album / Movie மௌனம் சம்மதம் - Mounam Sammadham (1990) Latest Song Lyrics