கனா காணும் காலங்கள் கரைந்தோடும் - Kanaa Kaanum Kaalangal Song Lyrics

கனா காணும் காலங்கள் கரைந்தோடும் - Kanaa Kaanum Kaalangal

கனா காணும் காலங்கள் கரைந்தோடும் - Kanaa Kaanum Kaalangal


Lyrics:
பெண் : கனா காணும்
காலங்கள் கரைந்தோடும்
நேரங்கள் கலையாத கோலம்
போடுமோ ஓ விழி போடும்
கடிதங்கள் வழி மாறும்
பயணங்கள் தனியாக ஓடம்
போகுமோ
ஆண் : இது இடைவெளி
குறைகிற தருணம் இரு
இதயத்தில் மெல்லிய
சலனம் இனி இரவுகள்
இன்னொரு நரகம்
இளமையின் அதிசயம்
பெண் : இது கதியில்
நடந்திடும் பருவம்
தினம் கனவினில்
அவரவர் உருவம் சுடும்
நெருப்பினை விரல்களும்
விரும்பும் கடவுளின் ரகசியம்
ஆண் & பெண் : உலகில்
மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும்
பாஷை மெதுவா இனி
மழை வரும் ஓசை ஆஆ…..
ஆண் : கனா காணும்
காலங்கள் கரைந்தோடும்
நேரங்கள் கலையாத கோலம்
போடுமோ ஓஹோ விழி போடும்
கடிதங்கள் வழி மாறும்
பயணங்கள் தனியாக ஓடம்
போகுமோ
ஆண் : தரிரா ……..
பெண் : நனையாத
காலுக்கெல்லாம்
கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேர் என்றால்
நட்பு என்று பேரில்லை
ஆண் : பறக்காத
பறவைக்கெல்லாம்
பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம்
களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதை
தேடி போகிறதோ திரி தூண்டி
போன விரல் தேடி அலைகிறதோ
பெண் : தாயோடும் சிறு
தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது
கிடையாதே தாவி வந்து
சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி
இல்லையே
ஆண் : …………………………..
ஆண் : கனா காணும்
காலங்கள் கரைந்தோடும்
நேரங்கள் கலையாத கோலம்
போடுமோ
பெண் : விழி போடும்
கடிதங்கள் வழி மாறும்
பயணங்கள் தனியாக ஓடம்
போகுமோ
ஆண் : இது என்ன காற்றில்
இன்று ஈர பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசி கொண்டு அந்தி
வேலை அழிகிறதே அதி காலை
நேரம் எல்லாம் தூங்காமல்
விடிகிறதே விழி மூடி தனக்குள்
பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே
பெண் : நடை பாதை
கடையில் உன் பெயர்
படித்தால் நெஞ்சுக்குள்
ஏனோ மயக்கங்கள் பிறக்கும்
ஆண் & பெண் : பட படப்பாய்
சில கோபங்கள் தோன்றும்
பனி துளியாய் அது மறைவது
ஏன் நில நடுக்கம் அது
கொடுமைகள் இல்லை மன
நடுக்கம் அது மிக கொடுமை
பெண் : …………………………..
பெண் : கனா காணும்
காலங்கள் கரைந்தோடும்
நேரங்கள் கலையாத கோலம்
போடுமோ ஓஹோ விழி போடும்
கடிதங்கள் வழி மாறும்
பயணங்கள் தனியாக ஓடம்
போகுமோ

கனா காணும் காலங்கள் கரைந்தோடும் - Kanaa Kaanum Kaalangal Song Lyrics, கனா காணும் காலங்கள் கரைந்தோடும் - Kanaa Kaanum Kaalangal Releasing at 11, Sep 2021 from Album / Movie 7ஜி ரெயின்போ காலனி - 7G Rainbow Colony (2004) Latest Song Lyrics