குறிஞ்சியிலே பூ மலர்ந்து - Kurinjiyile Song Lyrics

குறிஞ்சியிலே பூ மலர்ந்து - Kurinjiyile

குறிஞ்சியிலே பூ மலர்ந்து - Kurinjiyile


Lyrics:
குறிஞ்சியிலே பூ மலர்ந்து
குலுங்குதடி தன்னாலே
குறிஞ்சியிலே பூ மலர்ந்து
குலுங்குதடி தன்னாலே
குறு குறுத்த வண்டு ரெண்டு
பறக்குதடி முன்னாலே
குறு குறுத்த வண்டு ரெண்டு
பறக்குதடி முன்னாலே
குறிஞ்சியிலே பூ மலர்ந்து
குலுங்குதடி தன்னாலே
தந்தான தனா தன தந்தினா
தந்தான தனா தன தந்தினா
வெள்ளி மலை மான்களெல்லாம்
துள்ளுதடி வலையிலே
விளங்கி வந்த சங்கு நாதம்
முழங்குதடி மலையிலே
வெள்ளி மலை மான்களெல்லாம்
துள்ளுதடி வலையிலே
விளங்கி வந்த சங்கு நாதம்
முழங்குதடி மலையிலே
பால் மணக்குது பழம் மணக்குது
பறவை கூடும் வனத்திலே
தேன் இருக்குது தினை இருக்குது
வேடுவர் தினை புனத்திலே
பால் மணக்குது பழம் மணக்குது
பறவை கூடும் வனத்திலே
தேன் இருக்குது தினை இருக்குது
வேடுவர் தினை புனத்திலே
குறிஞ்சியிலே பூ மலர்ந்து
குலுங்குதடி தன்னாலே
தந்தான தனா தன தந்தினா
தந்தான தனா தன தந்தினா
மயிலிருக்குது குயிலிருக்குது
வள்ளி மலை நிலத்திலே
வேல் இருக்குது வில் இருக்குது
வஞ்சியரின் முகத்திலே
மயிலிருக்குது குயிலிருக்குது
வள்ளி மலை நிலத்திலே
வேல் இருக்குது வில் இருக்குது
வஞ்சியரின் முகத்திலே
முத்து மாலை பவள மாலை
மின்னுதடி கழுத்திலே
மூன்று காலம் உணர்ந்து சொல்லும்
திறமிருக்கு மனத்திலே
முத்து மாலை பவள மாலை
மின்னுதடி கழுத்திலே
மூன்று காலம் உணர்ந்து சொல்லும்
திறமிருக்கு மனத்திலே
குறிஞ்சியிலே பூ மலர்ந்து
குலுங்குதடி தன்னாலே
குறு குறுத்த வண்டு ரெண்டு
பறக்குதடி முன்னாலே
குறிஞ்சியிலே பூ மலர்ந்து
குலுங்குதடி தன்னாலே

குறிஞ்சியிலே பூ மலர்ந்து - Kurinjiyile Song Lyrics, குறிஞ்சியிலே பூ மலர்ந்து - Kurinjiyile Releasing at 11, Sep 2021 from Album / Movie கந்தன் கருணை - Kandan Karunai (1967) Latest Song Lyrics