மேகம் தான் இதில் மழையே - Maegam Dhan Ithil Song Lyrics

மேகம் தான் இதில் மழையே - Maegam Dhan Ithil

மேகம் தான் இதில் மழையே - Maegam Dhan Ithil


Lyrics:
மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை
பாய் மரம் ஒன்று நான் விரித்தேனம்மா
புயல் வரக்கண்டு அதில் தவித்தேனம்மா
திசை மாறவே தடுமாறினேன்
அலையதில் எழுதிடும் கவிதை என்பேன்
மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை
ஜோதியென்றேன் இருளைப் போக்கயில்லை
தோணியென்றேன் நதியைக் கடக்கயில்லை
நிலவென்றேன் மேகத்திலே மறைந்துகொண்டாளா
மலரென்றேன் இதழ்களை மூடிக்கொண்டாளா
கடலென்றேன் அலைகளையே நிறுத்திக்கொண்டாளாம்
கடலென்றேன் அலைகளையே நிறுத்திக்கொண்டாளாம்
காதலென்றேன் இதயமதே இல்லையென்றாளாம் ஹஹ
காதலென்றேன் இதயமதே இல்லையென்றாளாம்
மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை
பொன் மாலையென்றேன் தென்றல் வீசவில்லை
பூ மாலையிட யோகம் எனக்கு இல்லை
சொப்பனத்தில் நினைத்திருந்தேன் ராமனாக
சுயம்வரத்தில் என்னை நினைத்தால் ராவணன் போல
சீதையவள் வாழட்டுமே யுகம் யுகமாக
சீதையவள் வாழட்டுமே யுகம் யுகமாக
சிதை எரிந்த பின்னும் உருகிடுவேன் அவள் நினைவாக
சிதை எரிந்த பின்னும் உருகிடுவேன் அவள் நினைவாக
மேகம் தான் இதில் மழையே இல்லை
ராகம் தான் இதில் இசையே இல்லை
பாய் மரம் ஒன்று நான் விரித்தேனம்மா
புயல் வரக்கண்டு அதில் தவித்தேனம்மா
திசை மாறவே தடுமாறினேன்
அலையதில் எழுதிடும் கவிதை என்பேன்

மேகம் தான் இதில் மழையே - Maegam Dhan Ithil Song Lyrics, மேகம் தான் இதில் மழையே - Maegam Dhan Ithil Releasing at 11, Sep 2021 from Album / Movie நெஞ்சில் ஒரு ராகம் - Nenjil Oru Raagam (1982) Latest Song Lyrics