மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா - Mappillaiye Kovama Song Lyrics

மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா - Mappillaiye Kovama

மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா - Mappillaiye Kovama


Lyrics:
மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா
மொறச்சு பாக்காதய்யா மொகத்த சுளிக்காதய்யா
பூமாலை மாற்றி விட்டால் போதுமா
ஏய்க்க முடியாதய்யா ஏய்க்க முடியாதய்யா (மாப்பிள்ளையே)
ஆட வந்த ஆட்டமெல்லாம் முடிஞ்சுதா என்
ஆசை முகம் பார்க்க உனக்கு கசந்ததா
வலிய வந்த அல்லி என்று வெறுத்தியா நான்
வலிமையுள்ள வில்லி என்பதை மறுப்பியா (மாப்பிள்ளையே)
ஊரு விட்டு ஊரு போற ராஜாவே உன்ன
உசிரவிட்டு காதலிச்ச ரோஜாவ
வாட விட்டு ஓடி போக முடியுமா இப்போ
ஆடிகிட்டு முழிப்பது யார் தெரியுமா (மாப்பிள்ளையே)
கூட்டுக்குள்ளே சிங்கம் போலே முழிக்கிறே இந்த
குமரிப் பெண்ண பார்த்து என்ன மொறைக்கிறே
காட்டு ராணி உதவி இப்போ வேணுமா நானும்
கூட வர சம்மதிக்க முடியுமா....(மாப்பிள்ளையே)

மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா - Mappillaiye Kovama Song Lyrics, மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா - Mappillaiye Kovama Releasing at 11, Sep 2021 from Album / Movie கொஞ்சும் குமரி - Konjum Kumari (1963) Latest Song Lyrics