Odi Vanthu (ஓடி வந்து மீட்பதற்கு) - Megangal Irundu Song Lyrics

Odi Vanthu (ஓடி வந்து மீட்பதற்கு) - Megangal Irundu

Odi Vanthu (ஓடி வந்து மீட்பதற்கு) - Megangal Irundu


Lyrics:
ஓடி வந்து மீட்பதற்கு ...
உன்னை போல் கால்கள் இல்லை ...
ஓய்ந்திருந்து கேட்பதற்கு ...
நீதிக்கோ நேரம் இல்லை ...
பார்த்த நிலை சொல்வதற்கு ...
பரமனுக்கோ உருவம் இல்லை ...
பழி சுமந்து செல்வதன்றி ...
இவனுக்கோ பாதை இல்லை ...
மேகங்கள் இருண்டு வந்தால்
அதை மழை என சொல்வதுண்டு
மனிதர்கள் திருந்தி வந்தால்
அதை பிழை என கொள்வதுண்டோ
நெஞ்சத்தில் நேர்மை வந்தால்
அதில் நீதிக்கு பெருமை உண்டு ... ஹோ ...
வஞ்சகம் தேரில் வந்தால்
அதை வணங்கிட முறையும் உண்டோ ...
மேகங்கள் இருண்டு வந்தால்
அதை மழை என சொல்வதுண்டு
மனிதர்கள் திருந்தி வந்தால்
அதை பிழை என கொள்வதுண்டோ
த்யாகத்தின் தலை நிமிர்ந்தால்
இந்த தரணிக்கு லாபம் உண்டு ... ஹோ ...
தீமையின் கை உயர்ந்தால்
இங்கு தருமங்கள் வாழ்வதுனோ ...
அரும்புகள் மலர்ந்து வந்தால்
அந்த அழகினை ரசிப்பதுண்டு
பருந்துகள் திருட வந்தால்
அந்த பண்பினை பொருப்பதுண்டோ
உண்மைக்கு காலம் வந்தால்
சிலர் உயர் குணம் புரிவதுண்டு
ஊருக்கு நன்மை வந்தால்
நல்ல உள்ளங்கள் மகிழ்வதுண்டு
மேகங்கள் இருண்டு வந்தால்
அதை மழை என சொல்வதுண்டு
மனிதர்கள் திருந்தி வந்தால்
அதை பிழை என கொள்வதுண்டோ

Odi Vanthu (ஓடி வந்து மீட்பதற்கு) - Megangal Irundu Song Lyrics, Odi Vanthu (ஓடி வந்து மீட்பதற்கு) - Megangal Irundu Releasing at 11, Sep 2021 from Album / Movie நான் ஆணையிட்டால் - Naan Aanaiyittal (1966) Latest Song Lyrics