பிறந்த இடம் தேடி - Pirandha Idam Song Lyrics

பிறந்த இடம் தேடி - Pirandha Idam

பிறந்த இடம் தேடி - Pirandha Idam


Lyrics:
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக !
ஆலமரம் போல நீ வாழ
அங்கு ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உன்னைத் தாலாட்ட
உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட
காலமகள் உன்னைத் தாலாட்ட
உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக
புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
எதையும் தாங்கிடும் நிலை பெறவே
எங்கள் இதய பூமியில் ஒளி தரவே
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக !

பிறந்த இடம் தேடி - Pirandha Idam Song Lyrics, பிறந்த இடம் தேடி - Pirandha Idam Releasing at 11, Sep 2021 from Album / Movie நான் ஆணையிட்டால் - Naan Aanaiyittal (1966) Latest Song Lyrics