முத்துத் தேரே தேரே - Muthu Therey Song Lyrics

முத்துத் தேரே தேரே - Muthu Therey

முத்துத் தேரே தேரே - Muthu Therey


Lyrics:
முத்துத் தேரே தேரே பக்கம் யாரே யாரே
பொங்கும் ஆறே ஆறே இங்கே வேறே யாரே
ஆரோ ஆரிரோ எங்கோ ராகம் கேட்குது
கேட்கும் ராகத்தில் இந்த ஊரே தூங்குது
முத்துத் தேரே தேரே பக்கம் யாரே யாரே
உள்ளங்காலும் உள்ளங்கையும்
சில்லென்றாகும் வண்ணம்
உன்னைப் பாதி என்னைப் பாதி
ஊதக் காற்று தின்னும்
வெப்பம் ஏற வேண்டும் வேகம்
தெப்பம் போல ஆட
வெட்கம் வந்து மேலும் கீழும்
வெள்ளம் போல ஓட
அம்மாடி நாணமோ எப்போது நீக்குமோ
மாலையும் மேளமும் கூடினால் நீங்கலாம்....(முத்து)
எட்டிப் பார்க்க யாரும் இல்லை
கட்டிப் பார்க்க வேண்டும்
ம்... கட்டிப் பார்த்தால் தப்புச் செய்ய
கையும் காலும் தூண்டும்
அங்கம் யாவும் மின்னுதம்மா
தங்கப் பாளம் போலே
அந்தம் ஆதி அளப்பதென்ன
உந்தன் பார்வையாலே
ஹா எல்லாம் உன் ஏக்கமே இங்கேது தூக்கமே
தன்னானா னான்னனா இங்கேது தூக்கமே
ஏக்கமே தீர்க்கவே நாளை நான் பார்க்கிறேன்....(முத்து)

முத்துத் தேரே தேரே - Muthu Therey Song Lyrics, முத்துத் தேரே தேரே - Muthu Therey Releasing at 11, Sep 2021 from Album / Movie பார்வதி என்னை பாரடி - Parvathi Ennai Paradi (1993) Latest Song Lyrics