பார்வதி என்னைப் பாரடி - Parvathi Ennai Paradi Song Lyrics

பார்வதி என்னைப் பாரடி - Parvathi Ennai Paradi

பார்வதி என்னைப் பாரடி - Parvathi Ennai Paradi


Lyrics:
பார்வதி என்னைப் பாரடி...
பூங்கொடி வந்து சேரடி...
சின்னப் பூங்கிளி... என்னைச் சேருமோ...
சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ
மயக்கம் நெஞ்சோடுதான்
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ
கலக்கம் கண்ணோடுதான்
சோலையோ நடுச் சாலையோ
தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ வாடினேன்
இதயம் இனியும் சரணம்….(சின்ன)
வேடன் வந்து சூழ்ந்த போதும்
உன் எல்லை தான்
வேடந்தாங்கல் என்று எண்ணும்
பூங்கிள்ளை நான்
முள்ளில் வேலி போட்டால் என்ன
மாலைக் காற்று தாண்டாதா
கள்ளில் ஊறும் ஜாதிப் பூவை
கைகள் நீட்டித் தீண்டாதா
நீ அல்லால் உயிர் வேறெது
நீர் இன்றி பயிர் வாடுது
தேவியே எந்தன் ஆவியே கேளடி
இதயம் இனியும் சரணம்....(சின்ன)
உன்னைச் சேர்ந்து வாழத்தானே
நான் வாழ்வது
உன்னை நீங்கி தேகம் இங்கே
ஏன் வாழ்வது
மண்ணில் வாழும் ஏழைக்கெல்லாம்
பெண்ணின் மோகம் ஆகாதா
மண்ணால் செய்த பாண்டம் என்றால்
பொங்கும் சோறு வேகாதா
தேவதாஸ் கதை பாரடி ஓய்ந்ததா பதில் கூறடி
காதலி எந்தன் பார்வதி காதலன்
இதயம் இனியும் சரணம்
சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ

பார்வதி என்னைப் பாரடி - Parvathi Ennai Paradi Song Lyrics, பார்வதி என்னைப் பாரடி - Parvathi Ennai Paradi Releasing at 11, Sep 2021 from Album / Movie பார்வதி என்னை பாரடி - Parvathi Ennai Paradi (1993) Latest Song Lyrics