நாலு பக்கம் வேடருண்டு - Naalupakkam Vedan Song Lyrics

நாலு பக்கம் வேடருண்டு - Naalupakkam Vedan

நாலு பக்கம் வேடருண்டு - Naalupakkam Vedan


Lyrics:
நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மானிரண்டு காதல்
இன்பக் காதல்
அம்மம்மா என்னம்மா
காட்டினிலே கூடு கட்டி
கூட்டினிலே குருவி ரெண்டு
கூடல் கொஞ்சம் ஊடல்
அம்மம்மா என்னம்மா
ஆரண்யக் காண்டமிதை தொடங்கு
அயோத்தி பஞ்சணை போல் மயங்கு
ஆரண்யக் காண்டமிதை தொடங்கு
அயோத்தி பஞ்சணை போல் மயங்கு
சாகுந்தலம் படிக்க இறங்கு
தலையடியில் கை வைத்து உறங்கு
தலையடியில் கை வைத்து உறங்கு
அம்மம்மா என்னம்மா
நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மானிரண்டு காதல்
இன்பக் காதல்
அம்மம்மா என்னம்மா
ஆ...
ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ...
பாலோடு பாத்திரத்தை எடுத்து
பஞ்சாமிர்தம் கலந்து கொடுத்து
தாகங்கள் தீரும் வரை குடித்து
சல்லாப நாடகத்தை நடத்து
சல்லாப நாடகத்தை நடத்து
அம்மம்மா என்னம்மா
தேனுண்ட செங்கனி வாய் இரண்டு
ஸ்ருங்கார ராகமென திரண்டு
நான் உண்ணும் வேளையிலே மிரண்டு
நாணத்தில் போவதென்ன உருண்டு
நாணத்தில் போவதென்ன உருண்டு
அம்மம்மா
என்னம்மா
நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மானிரண்டு காதல்
இன்பக் காதல்
அம்மம்மா
என்னம்மா

நாலு பக்கம் வேடருண்டு - Naalupakkam Vedan Song Lyrics, நாலு பக்கம் வேடருண்டு - Naalupakkam Vedan Releasing at 11, Sep 2021 from Album / Movie அண்ணன் ஒரு கோவில் - Annan Oru Koyil (1977) Latest Song Lyrics