ஒரு சின்னத் தாமரை - Oru Sinna Thamarai Song Lyrics

ஒரு சின்னத் தாமரை - Oru Sinna Thamarai
Artist: Aaryan Dinesh Kanagaratnam ,Krish ,Suchitra ,
Album/Movie: வேட்டைக்காரன் - Vettaikaaran (2009)
Lyrics:
ஒரு சின்னத் தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடித் தைக்கின்றதே
இதை உண்மை என்பதா
இல்லை பொய்தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே
என் ரோமக்கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப்புன்னகை சுடுதே
என் காட்டுப்பாதையில் நீ ஒற்றைப் பூவடா
உன் வாசம் தாக்கியே வளர்ந்தேன் உயிரே
என் பெயர் கேட்டாலே அடி பாறையும் பூப்பூக்கும்
உன் காலடித் தீண்டிய வார்த்தைகள் எல்லாம்
கவிதைகளாய் மாறும்
உன் தெரு பார்த்தாலே என் கண்கள் அலைமோதும்
உன் வாசல் தேடிப் போகச் சொல்லிக் கெஞ்சுது என் பாதம்
என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள்
உன்னாலே என் வீட்டின் சுவரெல்லாம் ஜன்னல்கள்
(ஒரு சின்ன..)
உன் குரல் கேட்டாலே அங்கு குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்தக் காற்றுகள் மட்டும் மோட்சத்தினைச் சேரும்
அனுமதிக் கேட்காமல் உன் கண்கள் எனை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம் நொடியில் குடை சாயும்
உன் கைகள் கோர்க்காமல் பயணங்கள் கிடையாது
உன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது

Releted Songs
ஒரு சின்னத் தாமரை - Oru Sinna Thamarai Song Lyrics, ஒரு சின்னத் தாமரை - Oru Sinna Thamarai Releasing at 11, Sep 2021 from Album / Movie வேட்டைக்காரன் - Vettaikaaran (2009) Latest Song Lyrics