பனிவிழும் மலர்வனம் - Panivizhum Malar Song Lyrics

பனிவிழும் மலர்வனம் - Panivizhum Malar

பனிவிழும் மலர்வனம் - Panivizhum Malar


Lyrics:
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்
காமன் கோயில் சிறைவாசம்
காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே
இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே
பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில்
வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

பனிவிழும் மலர்வனம் - Panivizhum Malar Song Lyrics, பனிவிழும் மலர்வனம் - Panivizhum Malar Releasing at 11, Sep 2021 from Album / Movie நினைவெல்லாம் நித்யா - Ninaivellam Nithya (1982) Latest Song Lyrics