பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - Pitchai paathiram Song Lyrics

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - Pitchai paathiram

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - Pitchai paathiram


Lyrics:
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும்
எலும்போடு சதை நரம்புதிரமும்
அடங்கிய உடம்பு எனும் (பிச்சை)
அம்மையும் அப்பனும் தந்ததா? இல்லை
ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?
இம்மையை நான் அறியாததால்
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திடப் (பிச்சை)
அத்தனைச் செல்வமும் உன் இடத்தில் நான் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில் வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில் அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்..
ஒரு முறையா? இரு முறையா?
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையால் பழ வினையால்
கணம் கணம் தினம் எனைத் துடிக்க வைத்தாய்....
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே...
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே...
அருள் விழியால் நோக்குவாய்
மலர்ப்பதத்தால் தாங்குவாய்...
உன் திருக்கரம் எனை அரவணைத்துனதருள் பெறப் (பிச்சை)

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - Pitchai paathiram Song Lyrics, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - Pitchai paathiram Releasing at 11, Sep 2021 from Album / Movie நான் கடவுள் - Naan Kadavul (2009) Latest Song Lyrics