போகுதே போகுதே - Poguthae Poguthae Song Lyrics

போகுதே போகுதே - Poguthae Poguthae

போகுதே போகுதே - Poguthae Poguthae


Lyrics:
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
உறவும் இல்லையே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
சுதி சேரும் போது விதி மாறியதோ
அறியாத ஆடு வழி மாறியதோ
புடவை அது புதுசு கிழிந்து அழும் மனசு
தங்கப் பூவே சந்திப்போமா
சந்தித்தாலும் சிந்திப்போமா
மாயம் தானா
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நடந்தாலும் கால்கள் நடை மாறியதோ
மறைத்தாலும் கண்ணீர் மடை தாண்டியதோ
தரைக்கு வந்த பிறகு தவிக்கும் இந்தச் சருகு
காதல் இங்கே வெட்டிப் பேச்சு
கண்ணீர் தானே மிச்சமாச்சு
பாசம் ஏது
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
உறவும் இல்லையே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

போகுதே போகுதே - Poguthae Poguthae Song Lyrics, போகுதே போகுதே - Poguthae Poguthae Releasing at 11, Sep 2021 from Album / Movie கடலோர கவிதைகள் - Kadalora Kavithaigal (1986) Latest Song Lyrics