போன போக்கில் - Ponapokkil Song Lyrics

போன போக்கில் - Ponapokkil

போன போக்கில் - Ponapokkil


Lyrics:
போன போக்கில்
சொல்லும் சின்ன வார்த்தையே
சில்லென இருக்கு கேளு
உண்மையே
இன்னும் சீனி
சேர்த்து பேசினாய் இதோ
சட்டென அசந்து போகும்
பெண்மையே
நானுமே நானவா
இல்லை எம்பி எம்பி மேகம்
தீண்டவா
ஏகமாய் ஏங்கவா
இன்னும் இன்னும் பேச
வார்த்தை தேட வா
தேடியே ஆசையை
மாலையாய் சூடியே நாள்
எல்லாம் உன்னையே சுற்றவா
போன போக்கில்
சொல்லும் சின்ன வார்த்தையே
சில்லென இருக்கு கேளு
உண்மையே
இன்னும் சீனி சேர்த்து
பேசினாய் இதோ சட்டென
அசந்து போகும் ஆண்மையே
மெல்ல சொல்லவா
வேகம் கூட்டவா சொல்லி
செல்லவா இல்லை நிற்கவா
சொன்ன காதலை
கிள்ளி பார்க்கவா ரெண்டு
கையிலே அள்ளி தோற்கவா
பார்வையில் ஆயிரம்
மாற்றம் வரும் என்று நான்
இன்று தான் கண்டு
கொள்கிறேன்
காதலை கூறிடும்
உன் கண்ணின் வழி
என்னையே காண்கிறேன்
நான்
சாரை சாரையாய்
தாரை தாரையாய் அன்பு
தேக்கியே உன்னை
பார்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாய்
சேர்த்த சொற்களை காதின்
வாயிலே கொண்டு சேர்க்கிறேன்
தூறலை ஏந்திட கை
நீட்டினேன் தூறலாய் மட்டுமே
தூவி நின்றதே
இன்று என் உள்ளமே
நனைக்கும் வரை பெய்திடும்
வான்மழை நீ
போன போக்கில்
சொல்லும் சின்ன வார்த்தையே
சில்லென இருக்கு கேளு
உண்மையே
இன்னும் சீனி சேர்த்து
பேசினாய் இதோ சட்டென
அசந்து போகும் பெண்மையே
நானுமே நானவா
இல்லை எம்பி எம்பி மேகம்
தீண்டவா
ஏகமாய் ஏங்கவா
இன்னும் இன்னும் பேச
வார்த்தை தேட வா
பக்கத்தில் வந்ததும்
மூச்சிலே வாசனை மையமாய்
மையலாய் கொட்டுதே

போன போக்கில் - Ponapokkil Song Lyrics, போன போக்கில் - Ponapokkil Releasing at 11, Sep 2021 from Album / Movie அதே கண்கள் - Adhe Kangal (2017) Latest Song Lyrics