பொண்ணா பொறந்த இந்தப் பாவம் - Ponna Porandha Song Lyrics

பொண்ணா பொறந்த இந்தப் பாவம் - Ponna Porandha

பொண்ணா பொறந்த இந்தப் பாவம் - Ponna Porandha


Lyrics:
பொண்ணா பொறந்த இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு இங்கு தீரும்
கணவனைத் தேடி அலைகின்ற போதும்
குடும்பத்துக்காக உழைக்கின்ற போதும்
உயிரைக் கொடுத்து என்றும்
ஓடாகித் தேய்வாளம்மா....(பொண்ணா)
காற்றோடு வெயிலோடு மழை வந்த போதும்
தாங்கும் மண் தாய் போல பெண் அவள்
கல்லோடு புல்லோடு தமை தோண்டும் போதும்
தடுக்காத மண் போல பெண் அவள்
சுமைகளை தாங்காத சுமைதாங்கி உண்டோ
சுமை கண்டு சோர்கின்ற பெண் எங்கு உண்டோ
கண்ணுக்குள்ளே கண்ணீரின் ஆறொன்று
கன்னத்திலே பாயாமல் பாப்பாளே...(பொண்ணா)
உனை நம்பி உள்ளோரை நீ மறந்து வந்தால்
நீ நம்பும் தெய்வங்கள் உனைக் காக்குமா
அவள் கண்ட துன்பத்தில் உன் பங்கு இல்லை
இன்பங்கள் இங்குன்னைச் சேருமா
அப்போதும் உன் போதை தவறான போதை
இப்போதும் உன் பாதை தவறான பாதை
தன் கடமை தவறிடும் பேர்க்கெல்லாம்
வேண்டியதை தெய்வங்கள் காட்டாது...(பொண்ணா)

பொண்ணா பொறந்த இந்தப் பாவம் - Ponna Porandha Song Lyrics, பொண்ணா பொறந்த இந்தப் பாவம் - Ponna Porandha Releasing at 11, Sep 2021 from Album / Movie சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி - Chidambarathil Oru Appasamy (2005) Latest Song Lyrics