போவோமா ஊர்கோலம் - Povomaa Oorkolam Song Lyrics

போவோமா ஊர்கோலம் - Povomaa Oorkolam

போவோமா ஊர்கோலம் - Povomaa Oorkolam


Lyrics:
பெண் : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...
ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம்
பெண் : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...
***
ஆண் : அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா
பெண் : பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ள சுகம் அரண்மனை கொடுக்குமா
ஆண் : குளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா
பெண் : சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா
ஆண் : பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் மேடு
பெண் : வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு
ஆண் : அதிசயமான பெண்தானே
பெண் : புதுசுகம் தேடி வந்தேனே
ஆண் : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...
ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம்
ஆண் : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...
***
பெண் : கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்
ஆண் : கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
பெண் : ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே
ஆண் : உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே
பெண் : கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும்
ஆண் : அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
பெண் : போதும் போதும் உம் பாட்டு
ஆண் : பொறப்படப் போறேன் நிப்பாட்டு
பெண் : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...
ஆண் : ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
பெண் : காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம்
ஆண் : போவோமா ஊர்கோலம் ....
பெண் : பூலோகம் எங்கெங்கும்...

போவோமா ஊர்கோலம் - Povomaa Oorkolam Song Lyrics, போவோமா ஊர்கோலம் - Povomaa Oorkolam Releasing at 11, Sep 2021 from Album / Movie சின்ன தம்பி - Chinna Thambi (1991) Latest Song Lyrics