சும்மா இருந்தா - Summa Kidantha Song Lyrics

சும்மா இருந்தா - Summa Kidantha

சும்மா இருந்தா - Summa Kidantha


Lyrics:
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்
உண்மையோடு உழைக்கோணும் தானே தன்னன்னா - மச்சான்
ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா ஹே..
படித்த வேலைக்குப் பலபேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்
படித்த வேலைக்குப் பலபேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்
கொடுத்த வேலையை முடிப்பது சேட்டம்
குடிசைத் தொழிலுக்கு வேணும் நாட்டம்
உண்மையோடு உழைக்கோணும் தானே தன்னன்னா - மச்சான்
ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா ஹே..
அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதுமில்லை
அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதுமில்லை
இப்படி செய்வதினாலே தொல்லை
ஏற்பட்டதென்றால் சேர்க்கவுமில்லை
தெரிந்த தொழிலை செய்தாலே தானே தன்னன்னா - மச்சான்
தாழ்வுமில்லை அதனாலே தானே தன்னன்னா ஹே..
வேலை வேலை என்று ஓலமிட்டழுதா
ஆளைத் தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சி இருந்தா
வேலை செய்து பல விவரம் புரியுதா?
பாடுபட்டால் பலனுண்டு தானே தன்னன்னா - மச்சான்
பஞ்சம் தீர்க்க வழியுண்டு தானே தன்னன்னா
ஹே…

சும்மா இருந்தா - Summa Kidantha Song Lyrics, சும்மா இருந்தா - Summa Kidantha Releasing at 11, Sep 2021 from Album / Movie மதுரை வீரன் - Madurai Veeran (1956) Latest Song Lyrics