தாய் தின்ற மண்ணே - Thaai Thindra Mannae Song Lyrics

தாய் தின்ற மண்ணே - Thaai Thindra Mannae

தாய் தின்ற மண்ணே - Thaai Thindra Mannae


Lyrics:
தாய் தின்ற மண்ணே இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
தாய் தின்ற மண்ணே இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
நெல்லாடிய நிலம் எங்கே சொல்லாடிய அவை எங்கே
வில்லாடிய களம் எங்கே கல்லாடிய சிலை எங்கே
தாய் தின்ற மண்ணே தாய் தின்ற மண்ணே
கயல் விளையாடும் வயல்வெளி தேடி
காய்ந்து கழிந்தன் கண்கள்
காவிரி மலரின் கடி மனம் தேடி கருகி முடிந்தது நாசி
சிலை வடிமேவும் உளி ஒலி தேடி திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்
புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக்கறி பொறிப்பதுவோ
காற்றை குடிக்கும் தாவரமாகி காலம் கழிப்பதுவோ… ஓ…
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ மன்னன் ஆளுவதோ… ஓ… (தாய்)
நொறுங்கும் உடல்கள் பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு அழுகின்ற அரசன்
பழம் தின்னும் கிளியோ பிணம் தின்னும் கழுகோ
தூதோ முன் வினை தீதோ
களங்களும் அதிர களிருகள் பிளிர
சோழம் அழைத்து போவாயோ
தங்கமே எம்மை தாய் மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே புரண்டிருப்போம்
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அது வரை அது வரை… ஓ…ஓ...ஓ....
தமிழன் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே அழாதே
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவை சுமக்கும் நாளே அழாதே
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உரையில் தூங்கும் வாளே அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடு அழும் யாழே அழாதே (நெல்லாடிய)
தாய் தின்ற மண்ணே…. இது பிள்ளையின் கதறல்……
ஒரு பேரரசன் புலம்பல்…

தாய் தின்ற மண்ணே - Thaai Thindra Mannae Song Lyrics, தாய் தின்ற மண்ணே - Thaai Thindra Mannae Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆயிரத்தில் ஒருவன் - Aayirathil Oruvan (2010) Latest Song Lyrics