தமிழன் என்றொரு இனமுண்டு - Thamizhan endroru inam Song Lyrics

தமிழன் என்றொரு இனமுண்டு - Thamizhan endroru inam

தமிழன் என்றொரு இனமுண்டு - Thamizhan endroru inam


Lyrics:
தமிழன் என்றொரு இனமுண்டு
தனயே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்
அறிவின் கடலைக் கடைந்தவனாம்
அமிர்தம் திருக்குறள் அடைந்தவனாம்
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்
கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்
கம்பன் பாட்ரெனப் பெயர்கொடத்தான்
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
புண்ணிய முறையில் நுகர்த்திடுவான்
பத்தினி சாபம் பலித்துவிடும்
பாரில் இம்மொழி ஒலித்திடவே
சித்திரச் சிலப்பதிகாரமதை
செய்தவன் துறவுடை ஓரரசன்.
சிந்தா மணிமணி மேகலையும்
பத்துப் பாட்டெனும் சேகரமும்
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
நாகரி கத்தினை மிகக்காட்டும்.
தேவாரம் திருவாசகமும்
திகழும் சேக்கிழார் புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
உரைகளும் தமிழன் வாழ்வாகும்.
தாயும் ஆனவர் சொன்னதெலாம்
தமிழன் ஞானம் இன்னதெனும்
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
பாடலும் தமிழன் பெட்பெனலாம்.
உத்தமன் காந்தியின் அருமைகளை
உணர்ந்தவன் தமிழன் பெருமையுடன்
சத்தியப்போரில் கடனிருந்தான்
சாந்தம் தவத்துடனிருந்தான்

தமிழன் என்றொரு இனமுண்டு - Thamizhan endroru inam Song Lyrics, தமிழன் என்றொரு இனமுண்டு - Thamizhan endroru inam Releasing at 11, Sep 2021 from Album / Movie மலைக்கள்ளன் - Malaikkallan (1954) Latest Song Lyrics