தட்டான் தட்டான் - Thattan Thattan Song Lyrics

தட்டான் தட்டான் - Thattan Thattan

தட்டான் தட்டான் - Thattan Thattan


Lyrics:
ஆண்: தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
ஏ சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
ஆண்: மொட்டை பாறை பூவா வெடிச்சேனே
உச்சி தேனை வாரி குடிச்சேனே
என் கைரேகை பாத்த பேச்சி
கத சொன்னாலே நீயே சாட்சி
ஆண்: நா போற வர பாதையில
நெருஞ்சி முள்ள ஒதுக்கும் உன் பார்வை
ஆண்: தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
ஏ சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
ஆண்: குதிலுள நெல்லாட்டம்
குமியுதே உன் வாசம்
ஆசையா நீ பாக்க
சோறு பொங்கும்
ஆண்: தெருவுல போனாலும்
புழுதியா வந்தாலும்
தாவணி ராசாவா
மாத்த சொல்லும்
ஆண்: சேந்தனலா நெஞ்சிருக்க
உன் நெனப்பே தூரல் அடிக்கும்
ஊர் நிழலா நா இருக்க
என் நெசமே நீதாண்டி
ஆண்: முத்தத்தை தாயேன் ராசாத்தி
மொத்தமும் தரேன் கைமாத்தி
ஆண்: தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
ஏ சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
பெண்: உழவன் வயலுல எறங்கி
கூரா நாத்தையும் பிரிச்சு
பொண்ணா நெலத்தையே காக்கும்
பெருங்குடியாம் உழகுடியாம்
பெண்: பூட்டன் புஞ்சைய தொலைச்சான்
பாட்டன் நஞ்சைய தொலைச்சான்
கல்லா கடவுளும் கெடக்க
காடானோம் கூலிகுடியானோம்
பெண்: ஜெய்ச்சிட்டு கண்ணு
ஜெயிச்சிட்டு கண்ணு
ஆண்: காக்கா குருவி
நெதம் கூட்டம் போட்டு
நம்ம கதையை பேச
மேகம் கேட்டு ஏங்குதே
மழை ஓங்குதே
ஆண்: ஒடம்பெடுத்து தீக்கொழுத்து
உயிர் எரிய நனைஞ்ச கெடப்போம்
ஆண்: தட்டான் தட்டான்
ஏ தட்டான் தட்டான்
ஆண்: ஏ தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
அட சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
ஆண்: சூர காத்தாட்டம்
சூர காத்தாட்டம்
தட்டான் தட்டான்
தட்டான் தட்டான்
ஏ தட்டான் தட்டான்

தட்டான் தட்டான் - Thattan Thattan Song Lyrics, தட்டான் தட்டான் - Thattan Thattan Releasing at 11, Sep 2021 from Album / Movie கர்ணன் - Karnan (2021) Latest Song Lyrics