திருப்புகழ் - Thiruppugazh Song Lyrics

திருப்புகழ் - Thiruppugazh

திருப்புகழ் - Thiruppugazh


Lyrics:
ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை - நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை - அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை - யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது - மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் - குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி - லுடையோனே
தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு - சிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு - பெருமாளே.

திருப்புகழ் - Thiruppugazh Song Lyrics, திருப்புகழ் - Thiruppugazh Releasing at 11, Sep 2021 from Album / Movie காவிய தலைவன் - Kaaviya Thalaivan (2014) Latest Song Lyrics