உள்ளம் என்பது - Ullam Embadhu Aamai Song Lyrics

உள்ளம் என்பது - Ullam Embadhu Aamai

உள்ளம் என்பது - Ullam Embadhu Aamai


Lyrics:
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
தண்னீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
தண்னீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும்
அது நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை

உள்ளம் என்பது - Ullam Embadhu Aamai Song Lyrics, உள்ளம் என்பது - Ullam Embadhu Aamai Releasing at 11, Sep 2021 from Album / Movie பார்த்தல் பசி தீரும் - Paarthal Pasi Theerum (1962) Latest Song Lyrics