உறவே உறவே உயிரின் - Urave Urave Uyirin Song Lyrics

உறவே உறவே உயிரின் - Urave Urave Uyirin

உறவே உறவே உயிரின் - Urave Urave Uyirin


Lyrics:
பெண் : உறவே உறவே உயிரின் உயிரே
அழகே அருகே வா கண்ணாளா வா
உறவே உறவே உயிரின் உயிரே
அழகே அருகே வா கண்ணாளா வா
ஆண் : புத்தனைப் போலே சித்தனைப் போலே
இதுவரை வாழ்ந்தேனே
கண்மணி உன்னை கண்டது நானே
கண்ணன் ஆனேனே
ஆண் : அங்கங்கள் எங்கெங்கும் எத்தனை மச்சங்கள்
எண்ணுங்கள் என்றேதான் சொல்லுது எண்ணங்கள்
பெண் : வண்ணத்தின் முத்தங்கள் காதலின் சின்னங்கள்
முத்தங்கள் தந்தாலே மாறிடும் வண்ணங்கள்
ஆண் : கண்ணான கண்ணே கல்யாண பொண்ணே
பெண் : தொடாதே முன்னே எல்லாமே பின்னே
ஆண் : உன்னை தீண்டுதே உள்ளம்
அணை தாண்டுதே வெள்ளம்
தழுவும் பொழுதே நழுவும் நிலவே
அழகே அருகே வா பெண் பூவே வா...
தழுவும் பொழுதே நழுவும் நிலவே
அழகே அருகே வா பெண் பூவே வா
பெண் : காதலிலே காதல் இல்லை துறவியை போலானேன்
மன்னவனைக் கண்டவுடன் மறுபடி ஆளானேன்
ஆண் : கண்ணே நான் நேற்று வரை காவியைக் கண்டேனே
கண்மணி நீ வந்தவுடன் காவியம் கண்டேனே
பெண் : கல்யாண சேதி உன் கண்கள் பேசும்
ஆண் : குற்றால தென்றல் இப்போது வீசும்
பெண் : ஊரில் கேட்கும் மேளமே இனி நல்ல காலமே
பெண் : உறவே உறவே உயிரின் உயிரே
அழகே அருகே வா கண்ணாளா வா
உறவே உறவே உயிரின் உயிரே
அழகே அருகே வா கண்ணாளா வா
ஆண் : புத்தனைப் போலே சித்தனைப் போலே
இதுவரை வாழ்ந்தேனே
கண்மணி உன்னை கண்டது நானே
கண்ணன் ஆனேனே
லாலி லாலாலா லாலி லலலல.....லாலி லாலா....

உறவே உறவே உயிரின் - Urave Urave Uyirin Song Lyrics, உறவே உறவே உயிரின் - Urave Urave Uyirin Releasing at 11, Sep 2021 from Album / Movie நெருப்பு நிலா - Neruppu Nila (1987) Latest Song Lyrics